CINEMA
சுற்றி நிறைய ஆண்கள் இருப்பாங்க.. எப்போதும் அந்த விஷயத்துல கான்ஷியஸா இருக்க முடியாது.. நடிகை சரண்யா ஓபன் டாக்..!!
நடிகை சரண்யா காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பேராண்மை உள்ளிட்ட திரைப்படங்களில் சரண்யா நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு சரண்யா பேட்டி அளித்துள்ளார். கேரள திரைஉலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது.
அறிக்கை வெளியானதில் இருந்தே திரையுலகம் பற்றி தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட சரண்யாவிடம் சினிமாவில் வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, நான் வேலை பார்க்கிற இடத்துல எடிட்டர், இன்ஜினியர் இரண்டு பேர் இருக்கிறார்கள்.
அவங்களுக்கு 24,30 வயசு இருக்கும். இதே மாதிரி 35, 50, 60 வயசுலயும் வேலை பாக்குறவங்க இருக்காங்க. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் எங்க ஆபீஸ்ல நான் ஒரே பொண்ணு. நான் எல்லா நேரத்திலும் கான்ஷியஸா உட்கார முடியாது. எல்லா நேரத்திலும் இது தெரியுதா? அது தெரியுதான்னு பார்க்க முடியாது. நான் என் வேலையை தான் பார்க்கணும். பெண்கள் எப்போதுமே கான்ஷியஸா இருக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க.
நம்மளை சுற்றி இருக்கிற ஆண்கள் நம்மளை இப்படி பார்க்கிறாங்களா? அப்படி பாக்குறாங்களான்னு நம்ம கவனிச்சுக்கிட்டே இருக்க முடியுமா? அது ரொம்ப தலைவலிக்கும். ஆனால் என் கூட வேலை பார்க்கிற அத்தனை ஆண்களும் நான் சரியா வீட்டில் இருந்து கிளம்பிட்டேனா, வீட்டுக்கு போயிட்டனா, நான் சரியா சாப்டேனா அப்படிங்கறத பார்ப்பாங்க என ஓபனாக பேசி உள்ளார்.