தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்த பல வெற்றிகரமான இயக்குனர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபலமான இயக்குனர் தான் வசந்த பாலன். இவர் இயக்கிய அங்காடி தெரு, வெயில் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. அதனைப் போலவே கடந்த 26 ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. மேலும் அங்காடி தெரு திரைப்படம் சிறந்த படைப்பிற்கான விருதுகளையும் அள்ளிக் கொடுத்தது. வெயில் மற்றும் அங்காடித்தெரு திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய காவிய தலைவன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த இயக்குனர் என்ற விருதையும் பெற்று தந்தது.
இவர் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றினார். சங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன் மற்றும் இந்தியன் போன்ற திரைப்படங்களில் சங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் தான் வசந்த பாலன். அதன் பிறகு இவர் முதன் முதலில் ஆல்பம் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அங்கு திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு தளராமல் பல வெற்றி திரைப்படங்களை சினிமாவிற்கு கொடுத்தார். தொடர்ந்தும் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பயணித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதன்முதலாக இயக்குனர் சங்கரை சந்திக்க சென்ற அனுபவம் குறித்து பேசி உள்ளார்.
. அதில், நான் விஜயகாந்த் சார் சொல்லி சங்கர் சாரை சந்திப்பதற்காக நேரில் சென்று இருந்தேன். அப்போது நான் படித்து வாங்கிய சர்டிபிகேட் மற்றும் விளையாட்டுகளில் கலந்து கொண்டு வாங்கிய சர்டிபிகேட் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு சங்கர் சாரை சந்திக்க ஆபீசுக்கு சென்றேன். காலையிலேயே நான் சென்று விட்டதால் அங்கு சங்கர் சார் பரபரப்பான வேலையில் இருந்தார். பிறகு மாலை நேரம் நெருங்கியதும்தான் உள்ளே வா என்று கூப்பிட்டு என்ன விஷயம் சொல்லு என்று கேட்டார். விஜயகாந்த் சார் தான் உங்கள பாக்க சொன்னாரு என்று சொன்னதும் சரி என்று சொல்லிட்டு சர்டிபிகேட் எல்லாம் பார்த்துட்டு எந்த கல்யாண மண்டபத்தில் வாங்குன என்று சொல்லி கிண்டல் பண்ணாரு. கவிதை எல்லாம் எழுதுவேன் என்று சொன்னதும் சரி ஒரு கவிதை எழுது என்று என்கிட்ட சொல்லிட்டு அவரு சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சாரு.
எனக்கு அப்போதைக்கு அந்த சிகரெட்டை வைத்து ஒரு கவிதை எழுதலாம் என்று தோன்றியதும் போதை பழக்கத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். அதை படித்ததும் நீ எனக்கே அட்வைஸ் கொடுக்கிற மாதிரி கவிதை எழுதுறியா என்று கேட்டார். இல்ல சார் இப்போ என் முன்னாடி இதுதான் இருக்கு என் மேல சிகரெட் போக தான் படுது, அதனாலதான் இதை வைத்து கவிதை எழுதினேன் என்று சொன்னேன். உடனே ஆச்சரியப்பட்ட சங்கர் சரி உன்னுடைய கையெழுத்து அழகா இருக்கு நாளையிலிருந்து ஆபீசுக்கு வந்துரு என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்று வசந்தபாலன் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…