பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நந்திதா தாஸ். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.
அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கூட நடித்திருந்தார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் சுபோது மசகாரா என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற ஒரு மகனும் உள்ளார். ஆனால், ஏழு வருடங்கள் மட்டுமே நீடித்தது இந்த திருமண வாழ்க்கை. சுபோது மசகாராவை கடந்த 2017 ஆம் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். மேலும், நடிகை நந்திதா தாஸ் அவர்கள் தெலுங்கு சினிமாவில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதே சமயம் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது சில க்யூட்டான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளர். இதை பார்த்த இணையவாசிகள் பலரும் அழகி பட நடிகையா இது? என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…