ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள நிலையில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்தப் படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல் பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது. அதனைப் போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில், மலையாளத்தில் கே.ஆர் சச்சிதானந்தன் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இந்த திரைப்படத்தை மையமாக வைத்து ஏதாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். 1 கிராமத்து கதையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கிரிக்கெட் கதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனை மையமாக வைத்துதான் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கினேன். நான் எதிர்பார்த்ததை விட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
