வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் சுசீந்திரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதன்படி இவர் சிம்புவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்புவுக்கு இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து பாயும் புலி, வில் அம்பு, கென்னடி கிளப் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் இறுதியாக டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சுசீந்திரன் விஷாலை வைத்து இயக்கிய திரைப்படம் தான் பாயும் புலி.
இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார். அதில், நான் முதலில் விஜய் சாரை பார்த்து கதை சொன்னேன், ஆனா அது செட் ஆகவில்லை. பிறகு விஷாலின் பாண்டிய நாடு படம் முடித்த பிறகு சூர்யா சாரை பார்த்து ஒரு கதை சொன்னேன். ஆனால் அந்த கதை படமாக்கப்படவில்லை. பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ஜில்லா படம் பண்ணிட்டு இருக்கும்போது அவரை சந்திக்க சென்று இருந்தேன். அப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன் என்றால், பாயும் புலி படம் பண்ணுவதற்கு ஒப்பந்தம் பண்ணி விட்டேன்.
அப்போ விஜய் ஓட மேனேஜர் ஃபோன் பண்ணி நீங்கள் பாயும் புலி முடிச்சிட்டு தான் இங்க வர முடியுமா என்று கேட்டார். ஆமா என்று சொன்னதும் அப்போ நீங்க அந்த படத்தை முடிச்சிட்டு வாங்க நான் விஜய் சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி தரேன் என்று சொல்லிட்டாரு. அதோட அந்த வாய்ப்பு போயிருச்சு. அப்போ விஜய் சார் இந்த பக்கம் புலி என்று டைட்டில் வெளியிடுகிறார் இந்த பக்கம் பாயும் புலி என்ற டைட்டில் வெளி வருகிறது. நானும் சேர்ந்து அந்த பக்கம் போய் விழுந்த மாதிரி ஆயிருச்சு என்று சுசீந்திரன் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…
உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…