Categories: சினிமா

நடிகர் ஜெய்யை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த இது தான் காரணம்… இயக்குனர் சுசீந்திரன் ஓபன் டாக்..!

Spread the love

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் சுசீந்திரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதன்படி இவர் சிம்புவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்புவுக்கு இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து பாயும் புலி, வில் அம்பு, கென்னடி கிளப் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் இறுதியாக டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஜெய் பற்றி பேசி உள்ளார். அதில், என் சினிமா வாழ்க்கையில் நெருங்கி பயணித்த நண்பர் தான் ஜெய். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் என்னுடைய அறிமுகம் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகர். கிளிசரின் போடாமல் உண்மையிலேயே அழக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவர். அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய வாழ்க்கை உள்ளது. இன்றைய தலைமுறை இளம் இயக்குனர்களின் கதைகளை கேட்டு அதற்கு ஏற்றது போல நடித்தால் ஒரு நல்ல சினிமா கேரியர் உள்ளது. எல்லா நடிகருடைய வெற்றி தோல்விக்கு பின்னால் இருப்பது கதை தேர்வு தான்.

ஆனால் ஜெய் சினிமாவில் சரிக்கி கொண்டிருக்க முக்கிய காரணம் கதை தேர்வு சரியாக இல்லை. அதை அவர் சரியாக பண்ணினாலே சினிமாவில் உச்சத்திற்கு சென்று விடுவார். அவரை இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போது வந்தது என்றால், நீண்ட நாட்கள் இருவரும் ஒரே ரூமில் தான் இருந்தோம். அப்போது அடிக்கடி அவர் டியூன் போட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவர்கிட்ட நான் கேட்டபோது அவர் நான் ஒரு வெப் சீரிஸ் பண்ண போறேன் அதற்காக டியூன் போட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார்.

உடனே மியூசிக் உங்களுக்கு தெரியுமா என்று நான் கேட்டதும் 5th லெவல் வரைக்கும் படிச்சிருக்கேன் என்று சொன்னாரு. அதன் பிறகு தான் நீங்க தேவா சார் ஃபேமிலி இல்ல நான் மறந்துட்டேன் என்று சொன்னதும் அவர் டியூன் போட்டு காமிச்சாரு. அத பாத்ததும் பேசிக்காக ஒரு மியூசிக் டைரக்டருக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமையும் அவருக்கு இருந்தது. அதைப் பார்த்ததும் குற்றம் குற்றமே திரைப்படத்திற்கு ஏற்கனவே ஒருவரை முடிவு பண்ணியாச்சு அதனால் அடுத்த சிவ சுவா படத்திற்கு நீங்க தான் மியூசிக் டைரக்டர் என்று நான் அவர்கிட்ட சொன்னேன் என்று சுசீந்திரன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

5 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

8 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

22 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

26 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

40 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

41 minutes ago