படத்தின் பட்ஜெட் அதிகமானால் இப்படிதான் அதைப் படமாக்குவாரா சுந்தர் சி? பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

By vinoth on தை 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

   

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

   

 

இந்நிலையில் சுந்தர் சி பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு ஆச்சர்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் கலகலப்பு படம் பண்ணும்போது கதையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் நாங்கள் முதல் முறையாக இணைந்து பணியாற்றியதால் எங்கள் நிறுவனத்தால் அந்த கூடுதல் தொகையை ஒதுக்க முடியவில்லை. அதனால் அவரே தன் பணத்தை செலவு செய்து அந்தக் காட்சிகளைப் படமாக்கினார்.

ஆனால் அந்த படம் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன்பின்னர் நாங்கள் அவருக்குக் கூடுதலாக பணம் கொடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.