தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார்.

இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் “நான் மிகப்பெரிய குடிகாரன். அதை தாண்டி சினிமா மேல போதை அதிகம். என்னுடைய போதைக்கு சைடு டிஷ் இளையராஜா தான். இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான் அவன்தான் எனக்கும் சைடு டிஷ். இன்னைக்கு மனுஷங்க நெறைய பேரை குடிகாரனா மாத்தினது அவர்தான்னு வச்சிக்கோங்க என்று அநாகரீகமாக பேசினார்.

இந்நிலையில், 2K லவ் ஸ்டோரி திரைப்பட விழாவில் பேசிய நடிகர் அருள் தாஸ், “சினிமா மேடையில் அநாகரீகமாகவும், பிறரை ஒருமையில் பேசும் இயக்குனர் மிஸ்கின் பெரிய அப்பா டக்கரா? நாவை அடக்கி பேச வேண்டும். சினிமா மேடைக்கெனெ நாகரீகம் இல்லாமல் இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதா? உலக சினிமாக்களை காப்பியடித்து படம் எடுக்கும் போலி அறிவாளி மிஷ்கின்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
