#image_title
இன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேசப்படும் ஒரே விஷயம் நயன்தாரா தனுஷ் ஆகியோர்க்கு இடையே ஏற்பட்ட மோதல் தான். இன்று காலை நயன்தாரா அறிக்கை வெளியிட்ட உடனே தனுஷ் இப்படிப்பட்டவரா தனுஷ் ஏன் இப்படி செய்தார் என்று சினிமா ரசிகர்கள் பலர் குழம்பி இருந்தனர்.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வலைப்பேச்சு சேனலில் வெளியான வீடியோ பலருக்கு இந்த பிரச்சனையின் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறது. தனுஷ் மீது எந்த தவறும் இல்லை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தனுஷுக்கு எதிராக பல சதி வேலைகள் செய்திருந்தார்கள். Illegalளாக எனஓசி சர்டிபிகேட் வாங்க முயற்சித்தார்கள் மிரட்டினார்கள் அதனால் தான் தனுஷ் கோவம் அடைந்து விட்டார் என்றும் தனுஷ் நியாயமானவர் என்பது போல பதிவிட்டு இருந்தார்கள்.
இதற்கு அடுத்ததாக மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவான் மீது குற்றம் சாட்டும் விதமாக இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான எஸ் எஸ் குமரன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய தயாரிப்பு நிறுவனம் ரிஜிஸ்டர் செய்த எல்ஐசி என்ற தலைப்பை என் அனுமதி இல்லாமல் உங்கள் கணவர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார்.
இது கடந்த வருடமே நான் வெளியில் வந்து எல்லோரிடமும் சொன்னேன். தனுஷ் பெரிய ஆள் என்பதால் இரண்டு வருடம் காத்திருந்து இந்த நடவடிக்கை எடுக்கிறீர்கள். நான் வெறும் சாதாரணமானவன் என்பதால் என்னிடம் கேட்க கூட இல்லை. மிரட்டும் தோனியில்தான் உங்கள் கணவர் உங்கள் மேனேஜரை வைத்து பேசினார். இது எந்த வகையில் நியாயம் எந்த சிவனின் இடத்தில் உங்கள் கணவர் பதில் சொல்ல வைக்க போகிறீர்கள். நீங்கள் பண்ணுவது நியாயமே இல்லை என்பது போல ஒரு அறிக்கையை வெளியிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
ஒவ்வொரு செய்தியும் வெளிவர வர தனுஷின் மீது தவறு இல்லை நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் தான் தவறு இருக்கிறது என்பதை காட்டுவது போல் இருக்கிறது. தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தி அறிக்கை வெளியாகவில்லை. இந்த விஷயம் இன்னும் எந்த அளவுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…