இது என்னடா, விக்னேஷ் சிவனுக்கு வந்த சோதனை?.. அப்போ அஜித், இப்போ இவரா?.. வெடித்தது அடுத்த பிரச்சனை..!!

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும் விக்னேஷ் சிவன், காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தல அஜித்தை வைத்து ஏ கே 62 திரைப்படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு மயில் தெரு மேனி இயக்கத்தில் அஜித் தனது நடிப்பை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா தொடங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும் தயாரிப்பு நிறுவனம் பணிகளிலும் பிசியாக இருந்து வருகிறார் .

   

இந்த நிலையில் இயக்குணரும் நடிகருமான பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு விக்னேஷ் சிவன் பூஜை போட்டு உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம்  சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அதையும் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தத் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு LIC – love insurance corporation என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டைட்டில் குறித்து தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது இயக்குனர் எஸ் எஸ் குமரன் என்பவர் ஏற்கனவே எல் ஐ சி என்ற டைட்டிலை பதிவு செய்து வைத்துள்ளார். அவரை அணுகி விக்னேஷ் சிவன் டைட்டில் வேண்டும் என்று கேட்ட நிலையில் அவர் தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகும் விக்னேஷ் சிவன் LIC என்ற டைட்டிலை அறிவித்து இருப்பதற்கு எஸ் எஸ் குமரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். LIC டைட்டிலை விக்னேஷ் சிவன் பயன்படுத்தக் கூடாது எனவும் பிரச்சனை கிளம்பியுள்ளது.

author avatar
Nanthini