இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் உருவாக காரணம்… சங்கர் கொடுத்த ரியாக்ஷன்… இயக்குனர் சிம்புதேவன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on மாசி 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் சிம்புதேவன். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மூலமாக இவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இந்த திரைப்படம் பலருக்கும் இன்றும் ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படமாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அறை எண் 305ல் கடவுள் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி, கசடதபற, கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் ஆகிய காமெடி திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இறுதியாக யோகி பாபுவை வைத்து கடந்த ஆண்டு போட் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

போட்"... ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தது ஏன்? சிம்புதேவன் நச் பதில்! -  மின்னம்பலம்

   

இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சிம்பு தேவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் உருவான விதம் குறித்தும் இயக்குனர் சங்கர் உடனான அறிமுகம் குறித்தும் பேசி உள்ளார். அதில், மதுரையில் ஒரு கண்காட்சியில் அரசர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்த்த போது அரசர்கள் என்றால் ஒரு கம்பீரத்தோடு முறுக்கு மீசை மற்றும் சிக்ஸ் பேக்ஸ் காட்டும் உடம்போடு இருப்பது போல இருந்தது. உண்மையிலேயே அரசர்கள் என்றால் ஒரு அதிகார பலத்தோடு தான் இருக்க வேண்டும் என்பது மரபு. அதுவே ஒரு மன்னர் பதவி என்பது அறிவாளிக்கும் இருக்கலாம் முட்டாளுக்கும் இருக்கலாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

   

இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் வடிவேலுவை நாயகனாக்கியது ஏன்? - மனம்  திறக்கும் சிம்புதேவன் | chimbudevan about vadivelu - hindutamil.in

 

அதை வைத்து தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தை எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு தான் சங்கர் சார் கிட்ட கதையை சொல்ல வேண்டும் என்று முடிவு பண்ணேன். ஒரு ப்ரொடியூசர் உதவி இயக்குனரை சந்திக்க வேண்டும் என்பது ஒரு மாயையாக தான் இருந்தது. சங்கர் சாரை சந்திக்க சென்று இருந்தபோது ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு போங்க என்று சொன்னாங்க. நானும் உங்ககிட்ட கதை சொல்ல வேண்டும் என்று லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு வந்தேன். அதன் பிறகு மூன்றாவது நாளில் சங்கர் சார் எனக்கு போன் பண்ணி நேரில் வாங்க என்று சொன்னாரு. அதன் பிறகு தான் அவரை போய் சந்தித்து கதையை கூறினேன். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிறப்புக் காட்சியை  அவர் பார்த்துவிட்டார்.

Vadivelu, Shankar resolve differences over Chimbu Deven's Imsai Arasan 23am  Pulikesi sequel | Tamil Movie News - Times of India

அவர் கொடுத்த ரியாக்ஷனை வைத்து படம் அவருக்கு பிடித்து விட்டது என்று முடிவு செய்து விட்டேன். எனக்கும் ஒரு கான்ஃபிடன்ஸ் வந்துச்சு. மற்ற இயக்குனர்கள் மாதிரி அவர் கிடையாது. எதா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுவாரு. படம் பிடிச்சிட்டா அந்த இடத்திலேயே காமெடிக்கு சிரிச்சிடுவாரு. கைத்தட்டி படத்தை அந்த அளவுக்கு ரசிச்சாரு. சாதாரண மக்கள் மாதிரி தான் அவரும் நடந்துபாரு. படம் பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி பாராட்டினார். அன்னைக்கு நைட்டு நீங்க மியூசிக் பண்ணுங்க அடுத்த படம் நாம்ப பண்ணலாம் என்று சொன்னாரு.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் குறித்து ஷங்கர் அறிவிப்பு!! |  வவுனியா நெற்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இளவரசுசாரை காமெடி கதாபாத்திரத்திற்கு சூஸ் பண்ண காரணம் இருக்கு. அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ரசித்து பண்ண கூடியவர். அவர் ஸ்கிரீனில் சீரியஸாக நடித்தாலும் செட்டுக்கு வரும்போது நான் உதவி இயக்குனராக பணியாற்றும் சமயத்தில் அவ்வளவு கலகலப்பாக எல்லோரையும் ஓட்டிக் கொண்டிருப்பார். அவருக்குள்ள அப்படி ஒரு காமெடி ஒளிஞ்சி இருந்தது. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் அவர்தான் என்று என சிம்பு தேவன் பேசியுள்ளார்.