தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர். இந்திய சினிமாவில் புதிய பரிணாமங்கள் கொண்ட படங்களையும் புதுவிதமான கதைகளையும் அறிமுகப்படுத்தி வைத்த இவருக்கு தற்போது 61 வயதாகிறது. சினிமா டயலாக் ஆக இருந்தாலும் பெரிதாக யோசித்தால் தான் பெரிதாக வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்களுள் ஒருவர் ஷங்கர். இவருடைய முதல் படமான ஜென்டில்மேன் பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து அடுத்து இயக்கிய காதலன், இந்தியன் மற்றும் ஜீன்ஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பிளான ஃபீல் குட் காதல் படமாக இருந்தாலும் அதிலும் பிரம்மாண்டம் காட்டுவது தான் இவருடைய வேலையாக இருந்தது.

அதற்கு ஏற்ப கதை மற்றும் திரைக்கதையையும் தயார் செய்யும் இவர் அன்று முதல் இன்று வரை தன் படங்களில் எந்த வகையான புது டெக்னாலஜியை உபயோகிக்கலாம் எதை புதிதாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டிருப்பார். இயக்குனர் சங்கர் இந்திய சினிமாவின் பெரிய இயக்குனராக விளங்கினாலும் இதுவரை வெகு சில படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் இதுவரை சுமார் 17 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் சரியாக இரண்டு அல்லது மூன்று வருட இடைவேளை எடுத்துக் கொள்வார். அதன் பலனாக கிடைக்கும் அவுட்புட்டும் கச்சதமாக இருக்கும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் தான் சமீபத்தில் சொதப்பி விட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை என்பதாலும் லாஜிக் இல்லாத காட்சிகளாலும் படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனத்திலும் மரண அடி வாங்கியது. இதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து இவர் இறுதியாக கேம் சேஞ்சர் திரைப்படத்தை உருவாக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ஷங்கர் மகள் அதிதி சங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அதிதி சங்கர் படங்களில் சில பாடல்களை பாடி பின்னணி பாடகி ஆகவும் பலம் வந்தார். இதனைத் தொடர்ந்து முரளியின் மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் அதிதி நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில் தன் மகளைத் தொடர்ந்து தன் மகன் அர்ஜித்தையும் சங்கர் சினிமாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான அவருடைய இயக்கத்தில் தன் மகனை இயக்காமல் வேறு ஒரு நல்ல இயக்குனரை சங்கர் தேடிய நிலையில் இறுதியாக பிரபுதேவா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளதாகவும் பிரபுதேவா இயக்கத்தில் சங்கர் மகன் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது
