#image_title
எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறை மேல் கடுமையான விமர்சனமும் அதிருப்தியும் இருந்தது. அதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான்.
அந்த படத்துக்காக சுஜாதா ஏற்கனவே வசனங்களை எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டாராம். ஆனால் ஷூட்டிங் தொடங்க தாமதமான நிலையில் பின்னர் ஷங்கர் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கியோடு இணைந்து சில கூடுதல் வசனங்களை எழுதினார்.
எந்திரன் திரைப்படம் ரிலீஸான போது சுஜாதா உயிரோடு இல்லை. ஆனால் தன்னுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய அவருக்கு இயக்குனர் ஷங்கர் ஒரு அஞ்சலி குறிப்பைக் கூட தன்னுடைய படத்தில் இணைத்து வெளியிடவில்லை. இது அப்போதே சுஜாதா வாசகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஷங்கர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
சுஜாதாவின் மறைவுக்கு பிறகு ஷங்கர் உருவாக்கிய நண்பன், ஐ, 2.0 போன்ற படங்களில் வசனங்களும் திரைக்கதையும் திராபையாக இருக்கும். அப்போதே ஷங்கர் படங்களின் வெற்றிக்கு சுஜாதா எவ்வளவு முக்கியம் என்று பேச ஆரம்பித்தனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…