குரு மகளின் கல்யாணத்தில் சிஷியன் பார்த்த வேலை… இதை ஷங்கர் எதிர்பார்த்திருக்க மாட்டாரே….

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு  ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2021ல்  ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டர்.

   

ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார்.  இந்த புகாரில் சிக்கியதை தொடர்ந்து ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு 2வது திருமணம் முடிக்க மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார் இயக்குனர் ஷங்கர். இறுதியாக தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கு தனது மகளை நேற்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். இந்த  திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவில் வந்த ஒருவர் கூட சாப்பிடாமல் சென்று விட கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம் ஷங்கர். இதனால் இயக்குனர் அட்லீ பிரபலங்கள் ஒருவரை கூட விடாமல் அழைத்து சென்று, சாப்பிட வைத்து தான் அனுப்பினாராம். தனது குரு வீட்டு திருமணத்தில் ஓடி ஓடி வேலை பார்த்துள்ளார் இயக்குனர் அட்லீ. இயக்குனர் அட்லீ முதன்முதலில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.