தனக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்ட MGR -க்கு நன்றி சொல்லும் விதமாக வாலி எழுதிய பாடல்… அடடே இந்த பாடலா…?

By Begam

Published on:

கவிஞர் வாலி ‘வாலிப’ கவிஞர் என அழைக்கப்பட்டவர். அவரால் எம் ஜி ஆருக்கும் பாட்டெழுத முடியும், சிவகார்த்திகேயனுக்கும் பாட்டெழுதமுடியும். காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை அப்டேட் செய்துகொண்டவர் வாலி. மொழியை கொண்டு அசரவைக்கும் வரிகளை படைத்து நம்மை ‘அட’ போட வைப்பவர் வாலி. ஒவ்வொரு வரிகளிலும் அவ்வளவு கவித்தன்மைகள் நிறைந்திருக்கும்.

   

இவர் எழுதிய பாடல்கள் எல்லாம் காலத்துக்கும் பேசப்படுபவை. அந்தளவுக்கு அர்த்தங்களும் தத்துவங்களும் பொதிந்துகிடப்பவை. இவர் இறந்த பின்பும் இவரது பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. தனது கடைசி காலத்திலும் தமிழுக்காக ஓயாது உழைத்தவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலைக்கும் பாடல்களை இயற்றி, ரசிகர்களை மயங்க செய்பவர்.

கவிஞர் வாலி அவர்களுக்கும் MGR அவர்களுக்கும் ஒரு நல்ல உறவு  இருந்தது. கவிஞர் வாலியின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக அமைந்தவர் MGR. தன்னுடைய அனைத்து படங்களிலும் வாலி தான் பாடல் எழுத வேண்டும் என்பதை கண்டிஷனாக அவரிடமே கூறி விட்டாராம்.

இதற்கு நன்றி கூறும் விதமாக வாலி MGR க்கு எழுதிய பாடல் தான் ‘என்னை பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டிற்கு அவன் தான் தலைவன்’. இந்த பாடல் 1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ‘ அரச கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல்…