ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

By Mahalakshmi on ஜூலை 7, 2024

Spread the love

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதையடுத்து தனது உருவத்தால் பல அவமானங்களை சந்தித்து இருக்கின்றார். அதையெல்லாம் கடந்து தற்போது தமிழில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.

   

   

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். தற்போது ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார் தனுஷ். இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், தனுஷ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், சந்திப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த திரைப்படம் கடந்த மாதமே வெளியாக உள்ளதாக தகவல் வந்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மாதம் 26 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார். நடிகர் தனுஷின் ராயன் படம் அவரது இயக்கத்தில் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கின்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இப்படத்தில் ஆடியோ லான்ச் விழாவில் மிகச் சிறப்பாக என்ட்ரி கொடுத்தார். நடிகர் தனுஷ் எப்போதும் போல பாரம்பரிய உடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நடிகைகளின் ஆடலும் பாடலும் அனைத்து முடிந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் செல்வராகவன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய செல்வராகவன் நடிகர் தனுஷ் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார். நான் நடிகர் தனுஷின் செதுக்கவில்லை வெறும் கல்லை மட்டும் தான் வைத்தேன். அவரே தன்னை தானே செதுக்கி கொண்டார் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து பதில் அளித்த செல்வராகவன் ஒரு இயக்குனராக நடிகர் தனுஷ் பல திரைப்படங்களை இயக்க வேண்டும்.

அவரை நல்ல நடிகனாக ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதைத் தாண்டி நல்ல இயக்குனராக நிறைய படங்களை இயக்க வேண்டும். அண்ணனாக கூற வேண்டும் என்றால் இன்று இரவு வீட்டிற்கு வருகிறேன், சாப்பாடு ரெடியாக இருக்கட்டும் என்று பாசமாக தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றது.