Connect with us

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

CINEMA

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவரின் அனைத்து திரைப்படங்களும் வித்யாசமான கதைகளை கொண்ட படங்களாக இருக்கும். நடிகர் பார்த்திபன் தற்போது டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு கோவையை சேர்ந்த ரியல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவர் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக இருந்து வந்துள்ளார்.

   

இவர் கடந்த பிப்ரவரி மாதம் இருபதாம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் முடித்து கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதற்காக இயக்குனர் பார்த்திபனிடம் 68 லட்சத்து 54,000 பேசப்பட்ட நிலையில் அதில் முன் பணம் 42 லட்சம் ரூபாயை வாங்கி இருக்கின்றார். படத்தில் கிராபிக் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கவில்லை

 

இதனால் ஏப்ரல் 19ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்திருக்கின்றார் பார்த்திபன். இருப்பினும் நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டும் தான் முடித்து இருக்கின்றார் சிவபிரசாத். மேலும் சிவபிரசாத் கடந்த மாதம் கிராபிக்ஸ் பணிகளுக்கு நான்காம் தேதி 88 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.

ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் கொடுக்காத காரணத்தால் பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரி அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் சிவப்பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த கிராபிக்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுத்திருக்கின்றது. குறிப்பாக லோகேஷ் கனகராஜின் மாநகரம், மாஸ்டர், லியோ. விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை இந்த நிறுவனம் தான் செய்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top