1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவுக்குப் பல கலைஞர்களை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் விக்ரம் ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்குக் கிடைத்தனர். அந்த படத்தில் பாலாவுக்கு உதவி இயக்குனராக இருந்த அமீர் அடுத்த சில ஆண்டுகளில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், நந்தா இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். ஆனால் முதலில் அந்த படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் விக்ரம்மும், நந்தா நடித்த கதாபாத்திரத்தில் சூர்யாவும்தான் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

director ameer
ஆனால் அந்த படத்தில் இருந்து விக்ரம் வெளியேறியதால் சூர்யா ஹீரோவாக நடித்தார். படமும் டீசண்ட்டான வெற்றியைப் பெற்றது. ஆனால் விக்ரம் ஏன் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறித்த தகவலை தற்போது சசிகுமார் பகிர்ந்துள்ளார்.
அதில் “சேது படம் ரிலீஸானதும் விக்ரம் மிகப்பெரிய நடிகர் ஆனார். அந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை 100க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்கவைத்தது. அப்போது அவருக்காகக் கதை சொல்ல முன்னணி இயக்குனர்கள் எல்லாம் வந்தார்கள். அந்த நேரத்தில் விக்ரம் சார் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் ஒரு புது இயக்குனரிடம் தன்னை ஒப்படைக்க அவர் விரும்பவில்லை. அதனால்தான் அமீர் அண்ணனிடம் அதை சொல்லிவிட்டு வெளியேறினார். அமீர் அண்ணனும் அதற்கு ஓகே சொல்லி கதையை சூர்யாவுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

vikram and suriya in pithamagan
அந்த படத்தில் விக்ரம் சூர்யா இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு வந்த பிதாமகன் படத்தில் பாலா அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
