அறந்தாங்கி நிஷா கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு நிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான மாரி 2 திரைப்படத்தில் அட்டு ஆனந்தி கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 4 அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பங்கேற்று 70 நாள் அங்கேயே இருந்தார். இவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா ஒரு பேட்டியில் கூறியதாவது, நான் விஜய் டிவிக்குள்ள வரும்போது எங்க அம்மா கிட்ட நான் சொன்னேன். சேனல்ல என்ன எடுத்துக்க மாட்டாங்க அம்மா அப்படின்னு. ஏன்னா நான் பார்த்தது டிடி அக்கா, பாவனா, பிரியங்கா.
இவங்க எல்லாம் பாத்துட்டு ரொம்ப அழகா இருக்காங்க நம்மள விஜய் டிவி குள்ள எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா விஜய் டிவி குள்ள இதுவரைக்கும் உருவம், கலர் அப்படிங்கற விஷயம் வரவே இல்ல. இன்னைக்கு சேனல்ல எல்லாரும் சொல்லுவாங்க. நீ மேடை ஏறிட்டேன்னா உன் எனர்ஜி தான் எங்களுக்கு வேணும். நீ எல்லாரையும் கலாய்க்கிறீயா? நீ எல்லார்கிட்டயும் கலாய் வாங்குறியா? எங்களுக்கு அதுதான் வேணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு முறையும் ஒரு வேலை எடுத்து வைக்கும் போது என்ன சுத்தி இருக்க எல்லாரும் சொல்ற ஒரே வார்த்தை.
உன்னை எப்படி சேனல் எடுத்தாங்க அப்படின்னு தான். நான் ஆங்கர் ஆனதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப நல்ல தெரிஞ்சவங்க சொன்னாங்கஎந்த இங்கிலீஷ் நாலேஜ் இல்லாம உன்னை எப்படி சேனல்ல எடுத்தாங்க அப்படின்னு கேட்டாங்க. நான் படிச்சு இருக்கேன். எனக்கு இங்கிலீஷ் புரியும். ஆனா அந்த அளவுக்கு சரளமா பேச தெரியாது. எனக்கு தமிழ் நல்லா தெரியும். நாமளே தட்டு தடுமாறி மேலே வருவோம். ஆனா அடிச்சு கீழே உட்கார வைக்கிறதுக்கு நிறைய பேரு ரெடியா இருப்பாங்க. கலர் டாமினேஷன் அப்படிங்கறது இன்னும் 50 வருஷம் கழிச்சு பார்த்தாலும் இருக்கும் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.