தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நிறைய காதல் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் மக்கள் மனதில் நின்றது ஒரு சில படங்கள் மட்டுமே. காதலுக்காக தாஜ்மஹால் கட்டிய வரை வரலாறு கண்டதுண்டு. ஆனால் காதலுக்காக நாக்கை வெட்டிக் கொண்ட நபரை நேரில் பார்த்திருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் சொல்லாமலே திரைப்படம் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தத் திரைப்படத்தை கடந்த 1998 ஆம் ஆண்டு சசி இயக்கி இருந்த நிலையில் ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார். பாபி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் கதை மற்றும் நடிப்புதான் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. இயக்குனர் சசிக்கு இது முதல் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் அவருக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்தத் திரைப்படத்தின் கதையை முதலில் நவரச நாயகன் கார்த்திக்கிடம் தான் சசி கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்ததால் அதன் பிறகு நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களிடம் பேசி இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 வருடங்களை கடந்துள்ள நிலையில் சொல்லாமலே திரைப்படம் குறித்து இயக்குனர் சசி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், சொல்லாமலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அருகருகே 5 இயக்குனர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு புரொடியூசர் ஆர்.பி சவுத்ரி வந்திருந்தார். இயக்குனர்கள் எல்லோரையும் அழைத்து அவங்கவங்க படத்துல இதெல்லாம் பண்ணுங்க என்று சொல்லிட்டு இருந்தாரு. அப்போ பக்கத்துல இருந்த என்ன, சசி இங்கே வா என்று கூப்பிட்டாரு.

நான் போனதும், ஹீரோ இவர் தானா, இவரோட முகத்தை என்னால அஞ்சு நிமிஷம் உத்து பாக்க முடியல நீ எப்படி படம் ஃபுல்லா வச்சு பண்ண போற என்று என்கிட்ட கேட்டாரு. நானும் பண்ணிடுவேன்னு சொன்ன. காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்த அவரை ஹீரோவாக கொண்டு வர சூட்டிங் சமயத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த கஷ்டத்திற்கு எல்லாம் பலனாக படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என சசி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
