இன்றைய காலகட்டத்தில் பலவகையான உணவுகள் கிடைக்கிறது. எல்லா நாடுகளிலிருந்தும் உணவுகளை நம்மால் சாப்பிட முடியும். ஆனால் அந்த உணவுகள் எல்லாம் தரமாக இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்திலும் கொழுப்பு கலந்து இருக்கிறது. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தது ஃபாஸ்ட் புட் தான். இந்த ஃபாஸ்ட் புட்டுகள் மிகவும் உடம்புக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.
அப்படி உணவுகளால் நம் உடம்பில் ஏற்படும் பாதிப்புகள் இருந்து தப்பிக்க ஒரு சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதில் ஒன்றுதான் வெந்நீர் குடிப்பது. இந்த வெந்நீர் குடித்தால் நம் உடம்பில் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் எதையெல்லாம் அது சரி செய்யும் என்பதை பற்றி இனி காண்போம்.
தினமும் சாப்பிட்டதற்கு பிறகு சிறிதளவு வெந்நீர் குடிக்கும் போது அது நம் உடம்பில் செரிமானத்தை அதிகரிக்கும். குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்டு முடித்தவுடன் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்க வெந்நீரை குடிப்பதால் அது தேவையில்லாத கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் எடை குறைக்கும் டையாட்டில் இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பதனால் உடல் எடை குறையும்.
சிலருக்கு வயது சார்ந்த பிரச்சனைகள் நிறைய இருக்கும். வயிறு வலி மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வெந்நீர் குடிப்பதனால் உடனே தீரும். மேலும் வெதுவெதுப்பான நீர் நம் உடம்பில் இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. நம் உடல் சுறுசுறுப்பாக செயல்படும். வெந்நீர் குடிப்பது நாசி நெரிசலை குறைக்கும்.
இது மட்டுமில்லாமல் எழுந்தவுடன் வெந்நீர், சாப்பிட முடித்த உடனே வெந்நீர் குடிக்கும் போது இது நம் உடலை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் காயம் பட்ட இடத்தில் இருக்கும் தசைகளை தளர்வடைய செய்வதால் வலியை நமக்கு போகிறது. உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற இந்த வெந்நீர் அருமருந்தாக செயல்படுகிறது. பற்களில் இருக்கும் கிருமிகளை இந்த வெந்நீர் அழிக்கிறது. இதுபோல பல நன்மைகள் இருப்பதால் இனி தினமும் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.