இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இரா.சரவணன் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இரா.சரவணன். படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இரா.சரவணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த கதையை நீங்க ரஞ்சித் சார் கிட்டயோ, மாரி செல்வராஜ் சார்கிட்டயோ கொடுத்திருந்தால் அவர்கள் இதோட தாக்கத்தை மிகப்பெரிய அளவு பண்ணி இருப்பாங்க அப்படின்னு நிறைய பேர் என்கிட்டே சொன்னாங்க. இருக்கலாம் அவங்க சொன்னதை நான் நிச்சயமா ஏத்துக்குறேன்.
100 சதவீதம் அதுக்கு நான் உடன்படுறேன். ஆனா நான் என்னைக்கோ நடந்த கதையை சொல்லல. 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையை சொல்லல. இன்னைக்கும் நடக்கிற கதையை நாளைக்கும், நாளை மறுநாளும் நடக்கும் அப்படிங்கற அச்சத்தை விதைக்கிற கதையை நான் எடுத்து இருக்கேன்.
அப்படிங்கறப்போ நான் என்ன நினைத்தேன் என்றால் நம்ம இவ்வளவு கிராமங்களை தேடி போய் இருக்கோம். இவ்வளவு பஞ்சாயத்து போயிருக்கும். எல்லார்கிட்டயும் நின்னு நிதானமா பேசி இருக்கோம். இவ்வளவு பெரிய கள ஆய்வ மற்றவர்கள் பண்ண முடியுமா அப்படின்னு யோசிச்சேன். அந்த தகுதி எனக்கு இருக்குன்னு நினைச்சேன். அந்த தைரியத்தில் இந்த கதையை எடுத்தேன் என கூறியுள்ளார்.