தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர்கே செல்வமணி. கடந்த 1990ம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை என்ற படத்தின் மூலம் ஆர்கே செல்வமணி இயக்குனரானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த ஆர் கே செல்வமணி இப்போது பெப்சி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
அதேபோல் 1990 காலகட்டத்தில் ஹீரோ வில்லன் என நடித்து பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். தற்போது அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் ஆர்கே செல்வமணி, நடிகர் ஆனந்தராஜ் பங்கேற்றனர் அப்போது மேடையில் ஆர்கே செல்வமணி பேசியதாவது, நானும் ஆனந்தராஜூம் ஒன்றாக பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தோம்.
அப்போதே ஆனந்தராஜ் பெரிய பண்ணையார் போல ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு மேலே ஒரு துண்டை போட்டுக்கொண்டு ஜமீன்தார் போல தான் வருவார். அப்போது எங்களை யாருமே மதிக்கவில்லை. ஆனந்தராஜை யாரும் அங்கு நடிப்பதற்கு கூப்பிடவில்லை. நானும் இயக்குனராவேன் என்று யாரும் நினைக்கவில்லை. தமிழ் சினிமாவில் நாங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்ததற்கு காரணம் அந்த அவமானங்கள்தான் என்று ஆர்கே செல்வமணி நடிகர் ஆனந்தராஜை அணைத்தபடி இந்த விஷயத்தை மேடையில் பேசினார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…