தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் தான் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள் என தொடர்ந்து வித்யாசமான திரைப்படங்களை இயக்கிய இவர் தற்போது பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் உடன் அவரது நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான வெற்றிமாறன் பங்கேற்று வருகின்றார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் வெற்றிமாறன் குறித்து பேசிய இயக்குனர் ராம், பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் பணிகள் அனைத்தும் முடிந்து வாங்குவதற்கு யாருமே முன்வரவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு நாள் நான் வெற்றிமாறனை அழைத்து சென்று அந்த படத்தை பார்க்க வைத்தேன். படம் தொடங்கியது முதல் இறுதி வரை அவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அதன் பிறகு அடுத்த நாள் அந்த திரைப்படம் விற்பனையாகிவிட்டது. வெற்றி சிரித்தே ஒரு படத்தின் வியாபாரத்தை முடித்துவிட்டார் என்று ராம் கூறினார். இதனைக் கேட்ட வெற்றிமாறன், அட்டகத்தி படத்தை நான் பார்த்து முடித்த போது அடுத்த நாள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார். நான் அட்டகத்தி படத்தை வாங்கி விட்டேன், நீங்கள் சிரித்ததற்காக வாங்கினேனா அல்லது என் மீது உள்ள நம்பிக்கையில் வாங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆக மொத்தத்தில் நான் படத்தை வாங்கி விட்டேன் என்று கூறினார். உடனே நான் மிகவும் சந்தோசம் என்று சொல்லிவிட்டு வந்தேன் என வெற்றிமாறன் அந்த பேட்டியில் பேசியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது
