கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியார் வீட்டில் மரியாதை இல்லாததால் மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பால பள்ளத்தை சேர்ந்தவர் டார்வின் (46). இவருடைய மனைவி பபிதா நித்ய செல்வி (39). நேற்று முழுவதும் டார்வின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து உள்ளே எட்டிப் பார்த்த போது சடலமாக கிடந்த பபிதா அருகே டார்வின் பதற்றத்துடன் இருந்துள்ளார். உடனே பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பபிதாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு டார்வினை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறும்போது ஆத்திரத்தில் கழுத்தை நெரித்தும் துணியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் வீட்டுடன் மாப்பிள்ளை இருந்ததால் மரியாதை கிடைக்காததால் மனைவியுடன் சண்டை இட்டதாகவும் கொலைக்கு அது தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ள நிலையில் போலீசார் அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
