ரஜினியோடு இணைந்த அனைத்து படமுமே ஹிட்.. புகழின் உச்சத்தில் இருந்தபோது மறைந்த இயக்குனர் ராஜசேகர்

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு கமர்ஷியல் இயக்குனர் உருவாகி முன்னணி நடிகர்களை வைத்து மாஸ் ஹிட் படங்களைக் கொடுப்பது வழக்கம். இப்போது உச்சத்தில் இருக்கும் லோகேஷ் மற்றும் அட்லி போல, 80 களில் வரிசையாக கமர்சியல் ஹிட் படங்களைக் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் ராஜசேகர்.

அதிலும் ரஜினியோடு இவர் இணைந்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்கள் வெற்றிப் படங்களாக திகழ்ந்தன. இருவரும் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இணைந்து பணியாற்றினர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமையவே, அடுத்து இந்தி படமான கங்குவா படத்தில் இணைந்து பணியாற்றினர். மலையூர் மம்மட்டியான் படத்தின் ரீமேக்கான இந்த படமும் ஹிட் படம்தான்.

   

அதன் பின்னர் இருவரும் 1985 ஆம் ஆண்டு படிக்காதவன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தனர். அதற்கடுத்த ஆண்டு இவர்கள் கூட்டணியில் உருவான மாவீரன் திரைப்படம் தமிழில் முதல் முதலாக 70 எம் எம் பிலிமில் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இந்த படம் மட்டுமே இவர்கள் கூட்டணியில் தோல்வி படமாக கருதப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் இணைந்த மாப்பிள்ளை திரைப்படமும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம்தான். கடைசியாக இருவரும் ரஜினியின் தர்மதுரை படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம்தான் இயக்குனர் ராஜசேகரின் கடைசி படம்.  இந்த படம் ரிலீஸான சில தினங்களில் ஒரு கார் விபத்தில் ராஜசேகர் தான் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இறந்தார்.

ரஜினியோடு மட்டுமில்லாமல் கமல், விஜயகாந்த், பாண்டியராஜன், தியாகராஜன் ஆகியோரோடும் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் ராஜசேகர். இன்றும் ஒரு ட்ரண்ட் செட்டர் படமாகக் கொண்டாடப்படும் கமலின் விக்ரம் மற்றும் காக்கிச் சட்டை ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் உருவானவைதான்.