‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற பிரம்மாண்டப் படங்களை இயக்கி, நூற்றுக்கணக்கான கோடி வசூலை ஈட்டி, ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கான அடித்தளத்தை அமைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. தற்போது இவர், மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் 2027ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாரணாசி’ பட விழாவில் பேசிய ராஜமௌலி, இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாகத் தொடக்கம் முதல் இறுதி வரை IMAX 1.43:1 ஃபார்மேட்டில் முழுமையாக எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்தத் தொழில்நுட்பத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு ஐமேக்ஸ் 1.43:1 ஃபார்மேட்டை திரையிடக்கூடிய திரையரங்குகள் உலகளவில் வெறும் 42 மட்டுமே உள்ளன.
இந்தியாவில் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் மட்டுமே இந்த அதிநவீன வசதி உள்ளது. இதனால், படம் வெளியாகும் காலத்திற்குள் இந்தியாவில் உள்ள மற்ற திரையரங்க உரிமையாளர்கள் இந்த IMAX 1.43:1 வசதியைத் தங்கள் திரையரங்குகளில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜமௌலி விழா மேடையில் கோரிக்கை விடுத்தார். இது படக்குழுவுக்கு இருக்கும் பெரிய தொழில்நுட்ப சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…
மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…
சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…
முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…