#image_title
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சூர்யவம்சம் படத்தில் தேவயானி நடித்துக் கொண்டிருந்தபோது விக்கிரமனியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரன் தேவயானிக்கு வசனம் சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது இருந்த இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ராஜகுமாரன் முதல் முதலில் இயக்கிய நீ வருவாய் என என்னும் படத்தில் தேவயானி தான் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ராஜகுமாரனுக்கு கிடைத்தது.
அந்த படத்திலும் ஹீரோயினாக நடிக்க தேவயானியை அழைத்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருநாள் திடீரென ராஜகுமாரன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தேவயானி காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் தேவயானி வீட்டில் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதனால் தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ராஜ குமரனுடன் சென்று விட்டார். கடந்த 2001-ஆம் ஆண்டு இருவருக்கும் திருத்தணி கோவிலில் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு தேவயானி பெரிய படங்களில் நடிக்கவில்லை.
மாறாக ஒரு சில சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனிய பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சமீபத்தில் ராஜகுமாரன் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, இன்றைக்கு வரைக்கும் அது பயங்கரமான தேச துரோகமா நகுல் நெனச்சிட்டு இருக்காரு. தேசத்துரோக குற்றத்தில சம்பந்தப்பட்டவனா என்ன நினைச்சுட்டு இருக்காரு. சாதாரணமா சென்னைக்கு வந்து நடிப்பதற்காக வந்த ஒரு பொண்ண தமிழ்நாட்டின் மருமகள், அதுவும் மஞ்சள் மாநகரத்தின் மருமகள் சொல்றது எவ்வளவு பெரிய பெருமை.
இன்னைக்கும் தேவயானி ஃபேன்ஸ் எல்லாருக்கும் மகிழ்ச்சியான விஷயம். கடவுள் அனுகிரகம் பண்ணி இருக்காரு. இது பெரிய விஷயம். எல்லாருக்கும் அமையாது. பணம் சம்பாதிக்கலாம் கொஞ்ச நாள் புகழ் இருக்கலாம். அப்புறம் ஒன்னும் இல்லாம போயிடலாம். சில பேருக்கு அது அமைந்தது. குஷ்பூ மடத்திற்கு, ஜோதிகா மேடத்திற்கு அந்த மாதிரி அமைந்திருக்கு. தமிழ்நாட்டு மாப்பிள்ளைகள் ஒரு தடவை முடிவு எடுத்துட்டாங்கனா அதுல நிலையா இருப்பாங்க என பேசி உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…