“வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு நின்றேன்…” நந்தன் என் கதை இல்லை… படம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் உருக்கமான பதிவு…!!

Spread the love

‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இரா.சரவணன் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘நந்தன்’. திரையரங்குகளில் வெளியாகிச் சுமாரான வரவேற்பைப் பெற்ற போதிலும், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூல் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு நின்றேன். நந்தன் என் கதையல்ல, பல நூறு தலித் பஞ்சாயத்து தலைவர்களின் துயர வாழ்வு. திரையரங்குகளில் படம் சரியாக ஓடாததால் அலுவலக அறையைச் பூட்டிக்கொண்டு அழுதேன். ஆனால் ஓடிடியில் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்படப் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி குரல் கொடுத்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தப் படத்தின் தாக்கத்தால் அரசுத் தரப்பு நடவடிக்கை எடுத்து, அடுத்த சுதந்திர தினத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் முதன்முறையாகக் கொடியேற்றினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கறார் நடவடிக்கையால் அவர்களின் நெருக்கடிகள் குறைந்தன. இருப்பினும் இந்த மண்ணில் சாதியத் துயரங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அநீதிகளைக் கண்டும் காணாமல் கடப்பவர்கள் மீது கோபம் வருகிறது, நந்தனின் பயணம் இன்னும் முடியவில்லை” என்று நெஞ்சை உருக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

1 minute ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

8 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

24 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

33 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

1 மணத்தியாலம் ago