ட்ரம்ப்பிற்கு ஈரானின் ‘செக்-மேட்’…. 7 நிபந்தனைகள் ஏற்காவிட்டால் அமெரிக்காவை சுருட்டி வீசுவோம்…. உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்…!

Spread the love

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இது குறித்து ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் நிலைப்பாடு எந்தவித குழப்பமும் இன்றி அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தான் உருவாக்கிய சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் ஈரானின் உரிமைகளையும் இந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த 7 நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடித் தாக்குதல்கள் குறைந்திருந்தபோதிலும், வளைகுடாப் பகுதியில் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது. இந்தத் தொடர் பதற்றத்தின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து, உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வளைகுடாப் பகுதியில் அமைதியைத் திரும்பக் கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவையா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஈரானின் இந்த நிபந்தனைப் பட்டியல் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ‘ஷஜரே தய்யெபே’ தொடக்கப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு கடுமையான போர்க்குற்றமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 120 பள்ளி குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பலியான இந்தத் தாக்குதலில், சம்பந்தப்பட்ட பள்ளி தெளிவாக அடையாளம் காணக்கூடிய ஒன்றாக இருந்ததாகவும், அங்கு ராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் ஐநா குழு தெரிவித்துள்ளது. இதனால் இத்தாக்குதல் சர்வதேச சட்டங்களின் கீழ் போர்க்குற்றமாகக் கருதப்படலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ஐநா சபையின் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெள்ளை மாளிகை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, தற்போதைய மோதலில் ஈரான் மட்டுமே போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க அதிகாரிகளும் ராணுவமும் எப்போதும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். பரஸ்பர குற்றச்சாட்டுகளும் போர்க்குற்ற புகார்களும் அதிகரித்துள்ள சூழலில், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

56 seconds ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

5 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

10 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

11 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

25 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

33 minutes ago