தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் பிரேம்குமார். இவர் தமிழில் 96 திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் அனைவருடைய பள்ளி பருவ நினைவுகளை எடுத்துச் செல்லும் படமாக இந்த படம் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் அனைவருடைய பள்ளி நினைவுக்கும் கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 96 படத்தில் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில், சமந்தா மற்றும் திரிஷாவின் நடிப்பு குறித்து பேசினார். இருவருமே நடிப்பில் புலிகள். திரிஷாவின் நடிப்பு யாருக்குமே வராது. எத்தனை முறை டேக் சென்றாலும் முதலில் எப்படி நடித்தாரோ அதேபோல தான் கடைசி வரை நடிப்பார். இதுதான் சீன் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று திரிஷாவிடம் கூறிவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் அப்படியே நடிப்பார்.
அதனைப் போல தான் சமந்தாவும். நடிப்புன்னு வந்துட்டா அவங்க பயங்கரமா நடிப்பாங்க. நடித்து முடித்த சீனை பார்க்கும்போது அவர் நடிப்பை மட்டும் பார்க்காமல் உள்ளே சென்று பின்னால் இருப்பவர்கள் நடிப்பை கூட பார்த்து இந்த இடத்தில் தவறு உள்ளது என்று கச்சதமாக கூறுவார். அந்த அளவிற்கு ஆள் மனது வரை நடிப்பை கொண்டு சென்று நடிக்கும் திறமை கொண்டவர். திரிஷா நடிப்பில் ஒரு இன்னசென்ட் இருக்கும். அதுவே சமந்தா அசுரத்தனமாகவும் வெறித்தனமாகவும் நடிக்க கூடியவர் என்று பிரேம் கூறியுள்ளார்.