அவங்க சாபம் தான் என் லைஃப் இப்படி ஆச்சு.. எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவங்க தான்.. நளினி எமோஷனல்..!

By Nanthini on புரட்டாதி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை நளினி. 90களில் மிகப் பிரபலமான மற்றும் பிசியான நடிகையாக இருந்த இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டவர். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நளினி ஒரு கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ராமராஜனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ராமராஜனும் மிகப் பெரிய நடிகர் தான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

   

இவர்கள் இருவரும் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் அதன் பிறகு மனக்கசப்பு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது நளினி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சில படங்களிலும் சீரியல்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகின்றார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடிகை நளினி நடித்துள்ளார். இந்த நிலையில் நளினியின் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

   

 

அதில், நான் காதலித்து என்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி தான் திருமணம் செய்து கொண்டேன். அப்படி போராடி பெற்ற வாழ்க்கை ஒன்றும் நன்றாக அமையவில்லை. அவர்களுடைய சாபத்தை வாங்கிக் கொண்டு நான் நன்றாக வாழவில்லை. விவாகரத்திற்கு பின்னர் என்னுடைய மனநிலை என்பது என் பிள்ளைகள் மீது தான் இருந்தது. அவர்களை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை தான் மனதில் இருந்தது.

என் பிள்ளைகளை பொறுத்தவரை நான் ஒரு கண்டிப்பான அம்மா. என் பசங்களோட நண்பர்கள் யாராவது நல்லா படிக்கவில்லை என்றால் அவர்களை வீட்டுக்குள்ள விடமாட்டேன். என் அண்ணன் பசங்க சரியா படிக்கலைன்னா கூட என்கிட்ட கொண்டு வந்து தான் விடுவாங்க. என் பசங்களோட நண்பர்கள் பலரும் இன்று CA படித்து நல்ல நிலைமையில் உள்ளதற்கு நான் தான் காரணம் எனக் கூறுவார்கள். படிப்பு தான் முக்கியம். அந்த வயசுல பசங்கள கண்டிப்பா வளர்த்தா தான் வருங்காலத்தில் நல்லா வருவாங்க என்று நளினி பேசியுள்ளார்.