தமிழ் சினிமாவில் பல கமெர்சியல் இயக்குனர்கள் வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பேரரசு திரைப்படங்களுக்கு என்றே அதிக வரவேற்பு இருந்தது. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஊர் பெயர்களை கொண்டே இருக்கும். அவர் முதன்முதலில் இயக்கிய திருப்பாச்சி திரைப்படம் 100 நாட்கள் மேல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
முதல் திரைப்படமே தாறுமாறு ஹிட் என்பதால் இரண்டாம் திரைப்படத்திலும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. இவ்வாறு அவர் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கிய சிவகாசி திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் நிறுவனமே பேரரசை தேடி வந்தது. அதாவது எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தாருங்கள்.
அஜித்தை வைத்து என்று கூறியிருக்கிறார்கள். விஜய்யை வைத்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் ஹிட் கொடுத்த பேரரசுவை விஜய் இயக்குனர் என்றே முத்திரைக்குத்தி வைத்திருந்தார்களாம்.அதன் பிறகு அஜித்தை வைத்து திருப்பதி படம் எடுக்கப்பட்டது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பேரரசு, “முதலில் திருப்பதி படத்திற்கு வைத்த தலைப்பு வெள்ளையன்.
ஆனால் அதற்கு முன்னர் திருப்பாச்சி, சிவகாசி என்று ஊர் பெயர்களை வைத்த இரண்டு படங்களுமே ஹிட் அடித்தது. இதனால் ஏவிஎம் சரவணன் சார் ஊர் பெயர் வைத்தால் தான் அது உங்களுடைய படமாக இருக்கும் என்றார். அதன் பிறகு தான் திருப்பதி என்று பெயர் வைத்தேன். அந்தப் படமும் ஹிட்டானதால் பேரரசு ஊரரசு ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.