அஜித்தை வைத்து படம் இயக்க.. விஜயிடம் பர்மிஷன் கேட்ட பிரபல இயக்குனர்… விஜய் கொடுத்த செம பதில்..!

By Mahalakshmi on சித்திரை 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித்,விஜய். ஒரே கட்டத்தில் நடிக்க வந்தாலும் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இருவரும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். தற்போது சூப்பர் ஸ்டார்களாக இருந்து வருகிறார்கள்.

   

இருவரும் எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்பட்டாலும் அவர்கள் உண்மையாகவே சிறந்த நண்பராக தான் இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் ரசிகர்களும் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து மோதி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் வைத்து திருப்பாச்சி, சிவகாசி என மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் பேரரசு.

   

 

இந்த திரைப்படம் இரண்டுமே மெகா ஹிட்டானதால் விஜயின் ஆஸ்த்தான இயக்குனர் என்ற பெயரை பெற்றார். இப்படிப்பட்ட சூழலில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு முடிவு செய்து இருந்தார். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்து அட்வான்ஸ் தொகையை கொடுத்திருந்தார்கள். இதனை சென்று பேரரசு விஜய் இடம் தயக்கத்துடன் கூறி இருக்கின்றார்.

நான் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளேன் என்று கூறியதும் இதில் யோசிக்க என்ன இருக்கின்றது. இது ஒரு நல்ல வாய்ப்பு. உடனே படத்தை இயக்குவதற்கான அனைத்து வேலையையும் தொடங்குங்கள் என்று கூறினாரம். அதற்குப் பிறகு தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த பூஜையில் கூட விஜய் கலந்து கொண்டிருப்பார். இப்படி உருவானது தான் திருப்பதி திரைப்படம்.