வனிதா பொண்ணு என்பதால் அவர் வாயாடியாக இருப்பார் என்று எண்ணினேன். ஆனால் அப்படி இல்லாமல் மிகவும் சின்சியராக வேலை பார்க்கக்கூடிய ஒரு பெண் ஜோவிகா என இயக்குனர் பார்த்திபன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன் இயக்குனர். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்கள் இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். இவரின் திரைப்படங்கள் என்றாலே சற்று வித்தியாசமாக இருக்கும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது கதைக்களத்தை உருவாக்கி மக்களுக்கு கொடுப்பவர். சமீபத்தில் இவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இது சிங்கிள் ஷாட் படமாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது இவர் டீன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த படத்தை பயாஸ் கோர்ட் ட்ரீம்ஸ், அக்கிரா ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்கின்றது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கின்றார்.
ஹாரர் ட்ரில்லர் படமாக குழந்தைகளை வைத்து உருவாக்கி இருக்கின்றார் பார்த்திபன். கடந்த மாதம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் கூட இந்த படத்தின் கிராபிக்ஸ் டிசைனர் மீது பார்த்திபன் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விஷயங்கள் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது பணத்தை வாங்கிக்கொண்டு கிராபிக் டிசைனர் பணியை தனக்கு முடித்துக் கொடுக்கவில்லை என்று கோவையை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார் பார்த்திபன்.
இப்படி ஒரு பக்கம் தொடர்ந்து சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கையில் மறுபுறம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். தற்போது ஒரு ட்ரெண்ட் உருவாகி இருக்கின்றது. அதாவது ஒரு திரைப்படம் வெளியாகப் போகிறது என்றால் அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து அந்த படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பார்த்திபன் தற்போது தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றார். சமீபத்தில் தனது குடும்பம் மற்றும் மகள்கள் குறித்து பல விஷயங்களை பேசி இருந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜோவிகா குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “ஜோவிகா என்ற கேரக்டரை நான் முதன்முதலில் மிகப்பெரிய உயரத்தில் பார்த்தேன்.
அந்தப் பொண்ணை பற்றி வெளியில் இருக்கிற பேச்சுக்கும் உண்மையான அந்த பொண்ணுக்கும் சம்பந்தமே கிடையாது. என்னிடம் ரொம்ப சின்சியரா ஒர்க் பண்ணக்கூடிய ஒரு பொண்ணு, கடிவாளம் போட்ட மாதிரி இந்த விஷயத்தை பண்ணு என்று சொன்னா அதை மட்டும் தான் பண்ணுவாங்க. வனிதாவோட பொண்ணு தானே கண்டிப்பா வாயாடியா இருப்பாங்க அப்படின்னு தான் நினைச்சேன்.
பொருத்தமே இல்லாம அது பாட்டுக்கு அது வேலையை மட்டும் தான் பார்க்கும். தேவையில்லாத டைவர்சனே இருக்காது. நான் என்ன வேலை சொன்னேனோ அதை மட்டும் தான் அந்த பொண்ணு பார்க்கும். சில சமயம் அந்த பொண்ண கவனிச்சிட்டு இருப்பேன். என்ன செஞ்சுட்டு இருக்காங்க அப்படின்னு, அது அதோட வேலைய மட்டும் தான் பாத்துட்டு இருக்கோம். அப்புறம் ரொம்ப பாவமா ஆயிடுச்சு.
முதல்ல அவங்களுக்கு பிக் பாஸ்ல வாய்ப்பு கிடைத்தது. அதுல நிறைய சர்ச்சைகள் கிளம்பிச்சு. அதை பத்தின எனக்கு இந்த கவலையும் இல்ல. அப்புறம் அவங்களுக்கு சாங் அப்படின்னு வரும்போது தான் அவங்க ரொம்ப பயந்த சுபாவம் உள்ள ஒரு பொண்ணு அப்படின்னு தெரிய வந்துச்சு. அவங்க அம்மாவுக்கு அவங்களை எப்படியாவது ஹீரோயின் ஆக்கணும் அப்படினு ஆசை. அதுக்கு எந்த வாயிலாவது அவங்களுக்கு ஒரு உதவியாய் இருக்கணும் நெனச்சேன்” என்று கூறியிருக்கின்றார்.