தமிழ் திரையுலகில் காமெடி ஜாம்பவானாக விளங்கியவர் நடிகர் நாகேஷ். இவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நாகேஷ். முதலில் உருவக்கேலியால் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கின்றார்.
இருப்பினும் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய நகைச்சுவை மூலமாக சிவாஜி எம்ஜிஆர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களிடம் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். இவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்த நடிகர்கள் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாகேஷ் அவர்களை ஒரு இயக்குனர் அவமானப்படுத்தி இருக்கின்றார்.
எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த நல்லவன் வாழ்வான் என்ற படத்தின் பாடல் வரிகளை எழுதுவதற்கு வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் தனது நண்பர் நாகேஷையும் அழைத்துக் கொண்டு இயக்குனர் பா நீலகண்டன் அவரிடம் சென்றார். அவரது அறைக்கு வாலியும் நாகேஷும் வந்தார்கள்.
அப்போது இயக்குனர் பா நீலகண்டன் யார் உங்களில் வாலி என்று கேட்க நான் தான் வாலி என கூறினார். இவர் யார் என கேட்க எனது நண்பர் நாகேஷ் என்று கூறினார் வாலி. உடனே நாகேஷை பார்த்து நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள். நீங்களா பாட்டு எழுத போறீங்க என்று கூறி அவரை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி விட்டாராம். இதனால் நாகேஷ் மிகவும் மன வேதனை பட்டார்.
ஆனால் பின்னால் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து இருக்கின்றார். இன்னும் கூறப்போனால் தன்னை அவமானப்படுத்திய டைரக்டருடனே பல படங்களில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் நடிகர் நாகேஷ் பா நீலகண்டன் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தால் அவருக்கு பல எம்ஜிஆர் மற்றும் சிவாஜி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்க முடியாமலேயே போயிருக்கும். இதனை வாலி தனது கட்டுரை ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றார்.