Categories: சினிமா

இவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி நிக்கணும் பா, ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபலத்தை பார்த்து விஜயகாந்த் சொன்ன வார்த்தை.. சுவாரஸ்யத்தை பகிர்ந்த P. வாசு..!

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் P. வாசு, விஜயகாந்த் என்னுடன் படத்தில் பணியாற்றும்போது கேரளாவில் படபிடிப்பு நடந்தது. அப்போது என்னுடன் இருந்த அசிஸ்டன்ட் எல்லோரும் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள். அங்கு ஏதாவது யானை கிடைக்குமா என்று அவர்களைப் பார்த்து வர சொன்னேன். அவர்கள் பார்க்கச் சென்று விட்டு வந்து என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். அப்போது அதனை பார்த்த விஜயகாந்த், ஏய் இங்கிலீஷ் கொஸ்டிங்க அப்போ, இவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி நிக்கணும் அப்படின்னு காமெடியா பேசுனாரு. அதை என்னால மறக்கவே முடியாது. படப்பிடிப்பில் அவ்வளவு காமெடியாக நடந்து கொள்வார். தூரத்தில் அமர்ந்திருக்கும் ஹீரோயினி மீது கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்து கொள்வார். அந்த அளவிற்கு சேட்டை செய்வார் என்று P. வாசு பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

31 minutes ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

31 minutes ago

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

36 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

41 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

51 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

58 minutes ago