“நீதான் அந்த பைசன்” உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்… மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்தினம்…!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

நடிகர் துருவ் விக்ரம் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ளது. கபாடி வீரர் மணத்தி கணேசனின் வாழக்கையை படமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை 56 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறர்கள்,

இந்நிலையில் இந்த திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நீதான் அந்த பைசன். உன்னுடைய படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் முக்கியமானது” என்று பாராட்டியுள்ளார்.