Categories: சினிமா

அருண் விஜயின் அந்தப் படத்துக்காக ஒரு ரூபா கூட அட்வான்ஸ் வாங்கல.. எனக்கு வாக்கு தான் ரொம்ப.. மனம் திறந்த மகிழ் திருமேனி..!

Spread the love

மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் செல்வராகவன் கௌதம் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணி புரிந்தார் மகிழ்த்திருமேனி. கௌதம் மேனன் இயக்கிய “காக்க காக்க”, “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வேட்டையாடு விளையாடு” ஆகிய திரைப்படங்களில் உதவி  இயக்குனராக  பணிபுரிந்தார் மகிழ்திருமேனி. 2019 இல் “முன்தினம் பார்த்தேனே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  இயக்குனராக  அறிமுகமானார் மகிழ்திருமேனி. அதைத்தொடர்ந்து “தடையறத் தாக்க”, “மீகாமன்” 2021 ஆம் ஆண்டு “கழகத் தலைவன்” ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து மகிழ்திருமேனி இயக்கிய கழக தலைவன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்  மகிழ்திருமேனி.  இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் மகிழ்திருமேனி அருண் விஜயை வைத்து இயக்கிய திரைப்படம் தான் தடம். இந்தத் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ள மகிழ்திருமேனி, அருண் விஜய் நடித்த தடம் திரைப்படத்தை முதலில் வேறொரு நடிகரை வைத்து தான் பண்ண வேண்டியதாக இருந்தது. லைகா நிறுவனத்தின் ஒரு பெரிய நடிகர் தான் இந்த படத்தை செய்ய இருந்தார். ஆனா அதுக்கு முன்னாடியே நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வோம் என்று அருண் விஜய் இடம் நான் வாக்குறுதி கொடுத்து விட்டேன்.

ஆனால் படம் இயக்குவதற்கு ஒரு ரூபாய் கூட நான் முன்பணம் எதுவும் வாங்கவில்லை. திடீர்னு என்ன கூப்பிட்டு வேற ஒரு நடிகர் பண்ண போறாங்கன்னு சொன்னாங்க. இல்ல முடியாது என்று சொல்லி தயாரிப்பாளரை உடனே வரச் சொல்லி படப்பிடிப்பை ஆரம்பித்தோம். பெரிய சம்பளம் மற்றும் பெரிய நட்சத்திரத்திற்கு பதிலாக அருண் விஜய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நான் அன்னைக்கு அந்த முடிவு எடுத்தேன். என்னுடைய அடுத்த படமும் பெரிய நட்சத்திரத்துடன் தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என மகிழ்த்திருமேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

2 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

14 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

21 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

29 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

36 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

43 minutes ago