அந்த திட்டத்தையே கைவிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – அதை வேண்டாம் என தூக்கிப் போட காரணம் இதுதானா? – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக வரிசையாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ அடுத்து கூலி என 6 படங்களை இயக்கிய நிலையில் இதில் எல்லா படங்களுமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்கள்தான். ஆனால் விமர்சன ரீதியாக லியோ மற்றும் கூலி படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படங்களில் இரும்புக்கை மாயாவி என்ற கதை முக்கியமானதாக இருந்தது. ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் அல்லது நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படம் இந்த இரும்புக்கை மாயாவி டைட்டிலில் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

   

ஆனால் இனி இரும்புக்கை மாயாவி டைட்டிலும் அந்த கதையும் இனி வேண்டவே வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் தூக்கி போட்டு விட்டாராம். அதற்கு காரணம் பல படங்களில் லோகேஷ் நினைத்திருந்த காட்சிகள் எல்லாம் துண்டு துண்டாக வந்து விட்டன. மேலும் ஒரு படம் முழுவதும் இரும்புக்கை மாயாவி படத்தின் ஸ்டைலிலேயே வந்து விட்டதாம். இனி அப்படி ஒரு படம் எடுத்தால் அது சரிவராது என்பதால் அந்த திட்டத்தையே லோகேஷ் கனகராஜ் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.