இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக உள்ளார். அவரது மகள் அதிதி ஷங்கர் ஏற்கனவே பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் நடிக்க வந்துவிட்டார். இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிசெய்த அசோக் குமார் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் அர்ஜித் ஷங்கர் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் இந்தியில் பிரபல நடிகர் இயக்குனராக உள்ள அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர் ஏற்கனவே மகாராஜா படத்தில் நடித்து மிரட்டியிருந்தார். மேலும் இந்த படம் சென்னை 28 போல ஒரு ஜாலியான திரைக்களத்தில் உருவாகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
