கடைசி வரைக்கும் அது நடக்கலே… விஜய் நடிக்க வேண்டிய 3 படங்கள் குறித்து இயக்குனர் லிங்குசாமி சொன்ன சீக்ரட்!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, நான் மிக தீவிரமான ரஜினி ரசிகன். ஆனால் என் வீட்டில் எல்லோருமே விஜய் ரசிகர்கள்தான். நான் விஜய் கூட 3 படங்கள் செய்ய வேண்டியது. ஆனால் நடக்காமல் போய்விட்டது.

மாதவனுக்கு முன்னாடி ரன் படத்தில் நடிக்க வேண்டியது விஜய்தான். அதேபோல் சண்டக்கோழி படமும் வேட்டை படமும் கூட விஜய்தான் பண்ண வேண்டியது. அந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் என் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் சில பல காரணங்களால் நானும் விஜயும் சேர்ந்து படம் செய்ய முடியாமல் போய்விட்டது, என்று இயக்குனர் லிங்குசாமி வருத்தமாக கூறியிருக்கிறார்.