படையப்பா படத்தில் தனக்கு அப்பாவாக சிவாஜி நடிக்க வேண்டும் என்று படத்தின் நாயகன் ரஜினிகாந்த் ஆசைப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், சிவாஜி கணேசனிடம் கதை சொல்லி இருக்கிறார். அவரும் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் 6 அல்லது 7 நாட்கள்தான் கால்ஷீட் தேவைப்படும் நிலையில் அவர் மிகவும் அதிகமாக ஒரு சம்பளத்தை கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அதுபற்றி ரஜினியிடம் கூறியிருக்கிறார். சிவாஜி நடிக்க மிகப்பெரிய சம்பளத்தை கேட்கின்றனர். அதனால் அவர் வேண்டாம் என்றும் இயக்குனர் கூறியிருக்கிறார்.
அப்போது ரஜினிகாந்த், நாம் முதலில் அவரிடம் படத்தில் நடிக்குமாறு கேட்டுவிட்டோம். படத்தின் கதை அவரோட கேரக்டர் எல்லாமே சொல்லி விட்டோம். இப்போது சம்பளம் அதிகம் என்பதால் அவரை படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னால், நம்மளை விட கேவலமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவங்க கேட்ட சம்பளத்தையே தந்துவிடுவோம் என்று ரஜினிகாந்த் உறுதியாக சொல்லி இருக்கிறார். மறுநாளே சிவாஜி வீட்டுக்கு நேரில் சென்று படையப்பா படத்தில் நடிக்க அவர் கேட்ட சம்பளத்தை மொத்தமாக அவரது காலடியில் வைத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு திரும்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
