“ஒர்க் அவுட்  ஆகல… அதெல்லாம் ரொம்ப ரிஸ்ட் சார்…” மனம் நொந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி…. இப்படி சொல்லிடாரே… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி, சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்தும், தனது ‘சண்டக்கோழி 2’ படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையே அதிக காலதாமதம் ஏற்படும் போது இரண்டாம் பாகங்களின் மேஜிக் வேலை செய்யாது என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘சண்டக்கோழி 2’ படத்தின் மூலம் தான் அதை கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தன்னைச் சந்தித்த ஒரு பெரிய ஹீரோ ‘ரன் 2’ படத்தை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் மீண்டும் அந்த ரிஸ்க்கை எடுக்கத் தான் விரும்பவில்லை என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது..