Director Lenin Bharathi

போலி கொடை வள்ளல்களே… அப்போ எங்கே போனீங்க? ரஜினிகாந்தை தாக்கி பதிவிட்ட பிரபல இயக்குனர்!

By Elango on மாசி 5, 2026

Spread the love

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். அவரது குடும்பத்துடன் ரஜினி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக் கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே? உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தை காட்ட அவர்களை சீருடையோடு தான் அடையாளப்படுத்துவீர்களா என்று இயக்குனர் லெனின் பாரதி அந்த பதிவில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.