2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் டெல்லியில் 807 பேர் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 509 பேர் சிறுமிகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனவர்களில் 235 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 572 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
டெல்லி காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை 52,000-ஐ கடந்துள்ளது. தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இத்தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
