தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் தான் கே எஸ் ரவிக்குமார். விக்ரமின் உதவியாளரான இவர் புரியாத புதிர் என்ற திரைப்படம் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சேரன் பாண்டியன் திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவருடைய படங்களில் ஹீரோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகவே இருப்பார். பெரும்பாலும் சரத்குமார் தான் அந்த வேதத்திலும் நடிப்பார். இவர் இயக்கிய நாட்டாமை திரைப்படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போக அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அதன் பிறகு உருவான திரைப்படம் தான் முத்து.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக படையப்பா படத்திலும் இருவரும் இணைந்தனர். அதன் பிறகு லிங்கா திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். முன்னனி நடிகர்கள் பலரையும் இயக்கி உள்ளார். இப்படியான நிலையில் ஒரு காலகட்டத்தில் இயக்குனர் ராம்தாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்தான் கே எஸ் ரவிக்குமார். அப்போது ஒரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு காட்சியை படமாக்க வேண்டும். ஆனால் அந்த காட்சியை படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

ஏனென்றால் அந்த காட்சியில் எந்த நடிகர் நடிக்க வேண்டுமோ அன்று அந்த நடிகரின் காட்சியை அவர்களால் படம் பார்க்க முடியவில்லை. அந்தக் காட்சி எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த நாள் காலைக்குள் சண்டை காட்சிக்கு தான் செல்ல வேண்டும் இருந்தாலும் ஒரே நாளில் எப்படி சண்டை காட்சிக்கு தயார் செய்ய முடியும் என யோசித்துக் கொண்டிருந்தனர். இப்பவே ஆறு மணி ஆகிறது காலைக்குள் எப்படி எல்லாம் தயார் செய்ய முடியும் என்று ராம்தாஸ் கே எஸ் ரவிக்குமாரிடம் குழம்பிக் கொண்டிருந்தார். உடனே கே எஸ் ரவிக்குமார் சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நாளைக்கு காலையில 9 மணிக்குள்ள சண்டை செட்டப் எல்லாம் ரெடியா இருக்கும் என்று சொல்லியுள்ளார்.

அப்படி கூறிய கே எஸ் ரவிக்குமார் அன்று இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் காலை 8 மணிக்கு சண்டை செட்டப்பை ரெடி பண்ணி விட்டார். அதனைப் பார்த்த ராம்தாஸ் என்னையா வேற லெவல்ல பண்ணிட்டேன் என்று சொல்லி பாராட்டியுள்ளார். இரவு முழுவதும் நீ தூங்கவில்லையா போய் தூங்கு என்று ராம்தாஸ் கூற, அதை தான் நானும் உங்ககிட்ட சொல்ல வந்தேன் நீங்க போய் படபிடிப்பை தொடங்குங்க நான் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். உதவி இயக்குனராக பணியாற்றும்போதே கே எஸ் ரவிக்குமாரிடம் இருந்த முனைப்பு தான் அவரை தமிழ் சினிமாவில் இன்று ஒரு இயக்குனராக நிலை நிறுத்தியுள்ளது.
