நடிப்பிலிருந்து விலகும் விஜய் ஆண்டனி?.. திடீர் முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்.. காரணம் இதுதானா..?

By Nanthini on பங்குனி 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சுக்ரன் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. அதன் பிறகு வரிசையாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்தார். இதனிடையே நான் என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில் இவர் தன்னை ஒரு நடிகராக சினிமாவில் நிலை நிறுத்தினார். தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

விஜய் ஆண்டனி மன்னிப்புக் கேட்கணும்... தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு கடும் கண்டனம்! | Actor vijay antony faces troulbel for his statement - kamadenu tamil

   

பிறகு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் ககனமார்கன் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் தான் சக்தி திருமகன். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்க உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை முடித்த கையோடு ஜென்டில் உமன் பட இயக்குனர் ஜோசுவா சேதுராமனுடன் விஜய் ஆண்டனி இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

   

Vijay Antony: புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி

 

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி ஒரு புதிய முடிவு எடுத்துள்ளார். அதாவது தற்போது கமிட்டாகியுள்ள படங்களை முடித்த கையோடு விஜய் ஆண்டனி முழு நேர இசையமைப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. தான் முழுமையாக இசையை கற்றுக் கொண்டு இசைக்கு வரவில்லை நடிப்புக்காக சினிமாவுக்கு வந்து அதன் பிறகு இசை மீது கொண்ட ஆர்வத்தால் இசையை கற்றுக்கொண்டு இசையமைப்பாளராக மாறினேன் என விஜய் ஆண்டனி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

கோபத்தில் நிறைய இழந்துட்டேன்.. விஜய் ஆண்டனி சொன்ன அந்தவொரு வார்த்தை- இப்படியொரு பக்கமா? - மனிதன்

ஒரு சில நேரங்களில் தான் இசையமைப்பாளர் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் இவர் மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்திய நிலையில் அதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள விஜய் ஆண்டனி முழு நேரமும் இசையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. தற்போது கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு நடிப்புக்கு விஜய் ஆண்டனி முழுக்கு போடப் போகிறார் என கூறப்படுகிறது.