எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமானவர் கேஎஸ் ரவிக்குமார். 90ஸ் கிட்ஸ் களின் பல ஃபேவரிட் திரைப்படங்களில் அதிகமானவை கேஎஸ் ரவிக்குமார் உடையதாக தான் இருக்கும். இவர் இயக்கம் திரைப்படங்கள் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. நடிகர் ரஜினி, கமல், விஜய் , அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.
தன்னுடைய திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசதி வருகின்றார். இயக்கத்தை கைவிட்டு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அடுத்த கதாநாயகி யார் என்று நிகழ்ச்சியிலும் நடுவராக வழங்கி இருந்தார்.
இப்படி சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தங்களது மகன்களையும் மகள்களையும் சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அதற்கு நேர் மாறானவர் கேஎஸ் ரவிக்குமார். தனது மகள்கள் யாரையுமே சினிமா பக்கமே விட்டதே கிடையாது.
இவரின் மூத்த மகள் பெயர் மல்லிகா, இரண்டாவது மகள் ஜனனி ரவிக்குமார், மூன்றாவது மகள் ஐஸ்வந்தி ரவிக்குமார். இதில் மூத்த மகள் லைஃப் கோச்சிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அதாவது மன அழுத்தத்தில் டென்ஷனாக இருக்கும் பலரையும் மாற்றி இருக்கின்றார். இப்போது வரை 80க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களின் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கின்றார்.
இரண்டாவது மகள் ஜனனி ஒரு பிட்னஸ் ஆர்வலராகவும் இருந்து வருகின்றார். மூன்றாவது மகள் ஐஸ்வந்தி ஒரு டாக்டராக இருக்கின்றார். சென்னையில் அர்மோரா என்ற தெர்மடாலஜி கிளீனிக்கை வைத்திருக்கின்றார். இப்படி தனது மகள்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக மாற்றி இருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவரின் மூத்த மகளான மல்லிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது தனது தந்தை மிகவும் ஸ்ட்ரிட்டானவர். பெண்களுக்கு எதுக்கு சினிமா என்று திட்டுவார். எங்களை சினிமாவிற்குள் அவர் வரவிட்டதே கிடையாது. உங்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கின்றது. அதை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். சினிமாவில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தவர்.
எனது தந்தை கேஸ் ரவிக்குமார் அவரிடம் யாரும் உங்கள் மகளை நடிக்க வையுங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பே கிடையாது. அதை தாண்டி எங்கள் குடும்பத்தையும் எங்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். சினிமாவிற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கும் அது போன்ற ஆசை வந்தது இல்லை என அவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
View this post on Instagram