இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின.

பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கிட்டி, “என்னுடைய படத்துல மணி ரத்தினம் சார் AR ரஹ்மானை பயன்படுத்துமாறு சொன்னார். ஆனால் எனக்கு அது பிடிக்கல. ஏனென்றால் மூணு பாட்டு எடுத்தாச்சு. அதுனால எனக்கு வேண்டாமேன்னு தோணுச்சு.

AR ரஹ்மானை வேண்டாம்னு சொன்ன ஒரே முட்டாள் டைரக்டர் நான் தான். என்னமோ நமக்கு அது குடுத்து வைக்கல. அவரு ஒரு லெஜண்ட் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
